Sports
ஒருவழியாக உலகக்கோப்பை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ICC.. ரசிகர்களே முந்துங்கள் !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது. அதோடு முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான் மோதலும் இதே மைதானத்தில்தான் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா ஆடும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த அட்டவணையில் சில மாற்றங்களைஇதன் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறியுள்ளார். இதன் காரணமாகவே உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஐசிசி இணையதளத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி டிக்கெட் விற்பனைக்கான பதிவுகள் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. www.icc-cricket.com என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிக்கெட் வாங்குவதற்கான பதிவு தொடங்கும் என்றும் அக்டோபர் 25ம் தேதி முதல் பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி இந்தியா பங்கேற்காத மற்ற அணிகளுக்கான பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் இந்திய அணி விளையாடும் 2 பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அக்டோபர் 8ம் தேதி சென்னையில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதேபோல் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மற்றும் இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் கூறப்பட்டுள்ளது.
அதே போல அரையிறுதி போட்டிகள் மற்று இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!