Sports
”இந்த இங்கிலாந்து பந்துவீச்சாளரை நினைத்தாலே பயமாக இருக்கிறது” -அஸ்வினின் பயத்துக்கு காரணம் என்ன ?
டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அந்த தொடரில் கம்பேக் செய்த இங்கிலாந்து அணி, 3-வது டெஸ்ட் மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-2 என்று சமன் செய்தது. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்த தொடரில் 2-0 என்ற நிலையில் இருந்து இங்கிலாந்து அணியின் எழுச்சிக்கு மார்க் வுட் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர். பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் இவர்கள் முக்கிய பங்காற்றினர். இதன் காரணமாக தொடர் நாயகன் விருது கிரிஸ் வோக்ஸ்க்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர் வேறு எந்த அணியில் இருந்தாலும் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார் என இந்திய அணி வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ”கிரிஸ் வோக்ஸ் போன்ற வீரர் எப்படி இங்கிலாந்து அணிக்கு உள்ளே வெளியே என்று போயும் வந்தும் கொண்டே இருந்தார் என நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் வேறு எந்த அணியில் இருந்தாலும் பிளேயிங் லெவனில் முதல் மூன்று வீரர்களில் ஒருவராக இருந்திருப்பார்.
இவரைப் பார்க்கும் போது எப்படியா உனக்கு மட்டும் எல்லாம் வருது என பொறாமை வரவைக்கக்கூடிய வீரர் அவர். இப்போது பிராட் ஓய்வு பெற்றிருக்கும் பொழுது, இனி இவருக்கு அணியில் நிரந்தர இடம் உண்டு என்று தெரிகிறது. அதே நேரம் இவர் நிரந்தரமாக அணியில் இருந்தால், இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப் மிகவும் நீளமாகிவிடும் என்று ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது! “ என்று கூறியுள்ளார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!