Sports

சதம் அடித்தும் வாய்ப்பு கொடுக்காத BCCI.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர் !

மேற்கு வங்கத்தை சேர்ந்த மனோஜ் திவாரி உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடியதால் கடந்த 2008-ல் இந்திய அணிக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 12 ஒருநாள் போட்டிகளிலும், 3 இருவது ஓவர் போட்டியிலும் இந்தியாவுக்கு ஆடிய அவர் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

அதிலும், சர்வதேச போட்டியில் சதம் அடித்த பிறகும் வாய்ப்பே கொடுக்காமல் அடுத்த போட்டியிலே அவர் புறக்கணிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்திய அணிக்கு திருப்பிய அவர் மீண்டும் அணியில் இடம் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.

பின்னர் உள்நாட்டு தொடர்களில் ஆடிய அவர் அங்கும் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும் பி.சி.சி.ஐ அவருக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. இதன் காரணமாக ரஞ்சி தொடரில் மேற்கு வங்க அணி கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதோடு மம்தா பானர்ஜின் அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராகவும் செயல்பட்டார்.

இந்த நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன். கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. எனது வாழ்வில் நான் கடினமான சூழலில் இருந்தபோது எனக்கு கனவிலும் நினைக்காதவற்றை எனக்கு இந்த கிரிக்கெட் கொடுத்தது.

நான் கிரிக்கெட் மற்றும் கடவுளுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருப்பேன். இந்த பயணம் முழுவதும் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.முதல் தர கிரிக்கெட்டில் 48.56 என்ற சராசரியோடு 9908 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 169 லிஸ்ட் ஏ போட்டியில் 5581 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பணம் இருந்து என்ன பயன்? நாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் போல இல்லை -இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்!