Sports
மீண்டும் CSK குடும்பத்தில் எல்லைச்சாமி.. TSK அணியின் கேப்டனாக களமிறங்கும் பாப் டு பிளஸிஸ் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20" என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், CSK அணியின் பெரும்பாலான வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். CSK அணியின் வீரர்களான டெவான் கான்வே, மிட்சல் சாண்ட்னர் அம்பத்தி ராயுடு மற்றும் CSK அணியில் பயிற்சியாளராக இருக்கும் பிராவோ வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த அணியின் கேப்டனாக முன்னாள் CSK வீரர் பாப் டுபிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். CSK அணியின் எல்லை சாமியாக ஜொலித்த டுபிளசிஸ் பின்னர் RCB அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் CSK ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், தற்போது டுபிளசிஸ் மீண்டும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியோன் இணைந்துள்ளது CSK ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Also Read
-
Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் : உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
‘அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லை.. மரப் பலகையில் படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம்!’
-
‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
-
“தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!