Sports
ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா.. கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது. இதில் மேலும் அதிக வருவாய் ஈட்டவேண்டும் என கடந்த ஆண்டில் ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. மேலும், இந்த முறையும் பிளே ஆஃப் தொடருக்கு குஜராத் அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் ஜியோ சினிமாக்கு பேட்டியளித்த ஹர்திக் பாண்டியாவிடம் மும்பை சென்னை அணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு 2 வழிகள் உள்ளது. அதில் முதல் வழி மிகச்சிறப்பு வீரர்களை அணியில் எடுத்து வெற்றி பெறுவது, அதைத்தான் மும்பை அணி பின்பற்றுகிறது.
அதேபோல இரண்டாவது வழி வீரர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது. இதனை சென்னை அணி பின்பற்றுகிறது. சென்னை அணியின் இந்த அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது” என்று கூறியிருந்தார்.அவரின் இந்த கருத்து மும்பை ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பின்னர் பேசிய ரோகித் சர்மா, ”மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா போன்ற வீரர்களுடைய முன்னேற்றம் எப்படி இருந்ததோ, அதே போன்ற கதைதான் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா இருவருக்கும் இருக்கப்போகிறது. இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள். ஒருநாள் எங்களுடைய இந்த மும்பை அணியையும் சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணி என்று கூறுவார்கள்” என ஹர்திக் பாண்டியாவின் பெயரை சொல்லாமல் பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!