Sports
மும்பை அணியை பார்த்து எப்படி அவ்வாறு கூறலாம் ? -ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து தள்ளும் MI ரசிகர்கள் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதில் மேலும் அதிக வருவாய் ஈட்டவேண்டும் என கடந்த ஆண்டில் ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது. மேலும், இந்த முறையும் பிளே ஆஃப் தொடருக்கு குஜராத் அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இந்த நிலையில், வெற்றிபெறுவதற்கு சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது என கூறியுள்ளார். ஜியோ சினிமாக்கு பேட்டியளித்த ஹர்திக் பாண்டியாவிடம் மும்பை சென்னை அணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு 2 வழிகள் உள்ளது. அதில் முதல் வழி மிகச்சிறப்பு வீரர்களை அணியில் எடுத்து வெற்றி பெறுவது, அதைத்தான் மும்பை அணி பின்பற்றுகிறது.
அதேபோல இரண்டாவது வழி வீரர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது. இதனை சென்னை அணி பின்பற்றுகிறது. சென்னை அணியின் இந்த அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது. அதே போல மும்பை இந்தியன்ஸ் எனக்கு ஒரு ஸ்பெஷல் டீம், அது எனது முதல் காதல் போல" என்று கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியாவை யாரும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்காத நிலையில், அவரை முதல் முறை ஏலத்தில் எடுத்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி உருவாக்கிய நிலையில், அவரின் இந்த கருத்தை மும்பை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு!” : DISHA ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“வேலூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை ‘வேலுநாச்சியார்’ பெயர்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்! : நேரில் சென்று தீர்வுகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!