விளையாட்டு

4,777 நாட்கள், 13 வருடங்கள் காத்திருந்த பகை.. சொந்த மைதானத்தில் இறுதியாக மும்பையை வேட்டையாடிய CSK !

13 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தியுள்ளது.

4,777 நாட்கள், 13 வருடங்கள் காத்திருந்த பகை.. சொந்த மைதானத்தில் இறுதியாக மும்பையை வேட்டையாடிய CSK !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது பாதி ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 7 ஆட்டங்களில் அபாரமாக செய்யப்பட்ட சென்னை அணி அதன்பின்னர் அடுத்தடுத்த தோல்விகள், மழையால் ஒருபோட்டி ரத்து என சிறிது தடுமாறியது.

இந்த நிலையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் சென்னை அணி பரம வைரியான மும்பை அணியை சந்தித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2011-ம் ஆண்டு மும்பையை வீழ்த்தி இருந்தது. அதன்பின்னர் மும்பையிடம் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது.

4,777 நாட்கள், 13 வருடங்கள் காத்திருந்த பகை.. சொந்த மைதானத்தில் இறுதியாக மும்பையை வேட்டையாடிய CSK !

இதனால் இந்த போட்டியில் சென்னை வெற்றிபெறுமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்யவந்த மும்பை அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ரோஹித் டக் அவுட்டானார். அதோடு இஷான் கிஷனும் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் அடுத்து களமிறங்கிய நேவால் வதேரா மற்றும் சூரியகுமார் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனாலும் சூரியகுமார் 26 ரன்களில் நடையைக்கட்டினார்.

4,777 நாட்கள், 13 வருடங்கள் காத்திருந்த பகை.. சொந்த மைதானத்தில் இறுதியாக மும்பையை வேட்டையாடிய CSK !

ஆனால் தொடர்ந்து அபாரமாக ஆடிய நேவால் வதேரா 64 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பதிரனா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 140 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. அர்ஷத் கான் வீசிய பந்துவீச்சில் ருத்துராஜ் 20 ரன்கள் விளாசினார். ஆனால் 30 ரன்களில் ருத்துராஜ் ஆட்டமிழந்ததும் சென்னை அணியின் ரன்வேகம் குறைந்தது. பின்னர் வந்த ரஹானே 21 ரன்களிலும், ராயுடு 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய தொடக்க வீரர் கான்வே 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிவம் துபே மற்றும் தோனி ஆகியோர் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தனர்.

4,777 நாட்கள், 13 வருடங்கள் காத்திருந்த பகை.. சொந்த மைதானத்தில் இறுதியாக மும்பையை வேட்டையாடிய CSK !

இதனால் சென்னை அணி 17.4 பந்தில் வெற்றிபெற்று சேப்பாக்கம் மைதானத்தில் 4,777 நாட்களுக்கு பிறகு மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. மேலும் 2014-ம் ஆண்டுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டியிலும் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. அதோடு இந்த வெற்றியின்மூலம் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

banner

Related Stories

Related Stories