Sports
இதுதான் கடைசி IPL தொடரா ? -செய்தியாளர்கள் கேள்விக்கு தோனி கூறிய பதில் என்ன தெரியுமா ?
இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த 12-ம் தேதி சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக 200-வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். துரதிஷ்டவசமாக அந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகவே இருக்கும் என பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் அடுத்த தொடரிலும் விளையாடுவர் என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தொடர்ந்து கூறிவந்தனர். இந்த நிலையில், அது குறித்து தோனியே விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் ஓய்வு குறித்து முடிவு எடுப்பதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. இப்போது நாங்கள் விளையாட நிறைய போட்டிகள் உள்ளன. இப்போது நான் ஏதாவது ஓய்வு பற்றி கூறினால் அது பயிற்சியாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும்" என்று கூறியுள்ளார். இதனால் அவர் அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!