Sports
”இந்த IPL சீசனின் மிக மோசமான அணி இதுதான்”.. ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ள அணி எது?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். இந்நிலையில் இந்தாண்டுக்காக ஐபிஎல் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே சென்னை அணியும் குஜராத் அணியும் மோதின. இதில் குஜராத் அணியுடன் சென்னை அணி படுதோல்வியடைந்தது. தற்போது வரை 10 அணிகளும் இரண்டு போட்டிகளை விளையாடியுள்ளனர்.
இதில் லக்னோ, குஜராத், பஞ்சாப் அணிகள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில், நேற்று நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டத்தைச் முன்னாள் சி.எஸ்.கே வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து யூ டியூப் சேனலில் பேசிய ஹர்பஜன் சிங், "சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியால் 170-190 ஸ்கோர் எடுக்கக்கூடிய பேட்டிங் யூனிட் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இந்த அணியில் மார்க்ராம் ரன்களை அடிக்கவில்லை என்றால் அவ்வளவுதான். திரிபாதி ஒரு திறமையான வீரர். அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் இந்த சீசனில் இதுவரை அவர் பேட்டிங் வெளிப்படவில்லை. இனி வரும் போட்டியிலாவது ரன்களை அடிக்கிறாரா என்று பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“விஜய்க்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை” : தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
-
Party Fund வாங்கிய த.வெ.க?; நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட மெகா ஊழல் : ஆர். எஸ்.பாரதி அறிக்கை!
-
முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!
-
“பணத்தைக் கொடுத்து ஓட்டுகளையும் விலைக்கு வாங்க தூய சக்தி விஜய்” : DMK IT WING விமர்சனம்!
-
படுதோல்வியடைந்த தவெக.. அமோக வெற்றி பெற்ற திமுக.. கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது?