Sports
"அவர் ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை" -முரளி விஜய் வருத்தம் !
தமிழக வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் சொதப்பினாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
அதிலும் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் அவர் பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் தனது இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து சொதப்பிய அவர் பின்னர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், முரளி விஜய் அதிரடி வீரர் பிரித்வி ஷா ஏன் தற்போது இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியாவுக்காக 15 சூப்பர் ஸ்டார் வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறீர்கள் என்றால் என்னை பொறுத்த வரை நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்தான் ”
தற்போதைய இந்திய அணியில் நுணுக்கங்கள் அடிப்படையில் சுப்மன் கில் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோரை நான் மிகவும் விரும்புகிறேன். அதே போல் ரிஷப் பண்ட் ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டுகாக சிறந்த வேலையை செய்துள்ளார். அவர் விரைவில் குணமடைய நான் வாழ்த்துகிறேன். ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் பிரித்வி ஷா ஏன் தற்போது இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி நீங்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்திய அணியில் சமீபத்தில் கூட பிரித்வி ஷாவுக்கும் ரசிகர்கள் சிலருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கார் கண்ணாடியை உடைக்கும் வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!