Sports
டி20 தரவரிசைப் பட்டியல் - பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூரியகுமார்.. டாப் 15-ல் நுழைந்த கிங் கோலி !
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
அதிலும் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 187 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. அந்த கடினமான இலக்கை துறத்திய இந்திய அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. இந்திய அணியின் ஓப்பனர்கள் கேஎல் ராகுல், கேப்டன் ரோஹித் ஷர்மா இருவருமே நான்கு ஓவர்களுக்குள்ளாகவே வெளியேறினர்.
ஆனால் அதன் பிறகு கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தினார். இந்த பார்ட்னர்ஷிப் 62 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இந்த போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இவரின் இந்த ஆட்டம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், அந்த போட்டியில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ICC வெளியிட்ட டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சூரியகுமார் யாதவ் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேநேரம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் நீடிக்கிறார். அதேபோல இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 15ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!