Sports
"தள்ளிப் போ" - இந்திய அணியின் கால்பந்து கேப்டனை அவமதித்த இல.கணேசன்.. கொந்தளிக்கும் இணையவாசிகள் !
இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற FA தொடரை அடிப்படையாக வைத்து இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்போது தொடங்கப்பட்ட கால்பந்து தொடர்தான் டுராண்ட் கோப்பை (Durand Cup) தொடர். பழம்பெருமை வாய்ந்த இந்த தொடரை இந்திய விடுதலைக்கு பின்னர் இந்திய ராணுவம் நடத்திவருகிறது.
131-வது டுராண்ட் கோப்பை (Durand Cup) கால்பந்து போட்டி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடந்துவந்தது. இதன் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு FC அணியும், மும்பை FC அணியும் தகுதி பெற்றன.
இந்த இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு FC அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி FC அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
அதனபின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மணிப்பூர் ஆளுநரும் மேற்கு வங்க கூடுதல் பொறுப்பு ஆளுநருமான தமிழ்நாட்டை சேர்ந்த இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது பெங்களூரு FC அணியும் கேப்டன் சுனில் சேத்திரிக்கு ஆளுநர் இல.கணேசன்கோப்பையை வழங்கினார்.
அப்போது கைப்படத்தில் தான் தெரியவேண்டும் என்பதற்காகப் பெங்களூர் FC அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை அவர் ஓரமாகத் தள்ளிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பெங்களூர் FC அணியின் கேப்டனும், இந்திய அணியின் கேப்டனுமான ஒருவரை இப்படியா அவமதிப்பு செய்வது என விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு நடக்கும் முன்னர் தமிழகக் கால்பந்து வீரரான சிவசக்தி நாராயணனும், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக மற்றொரு விருந்தினரால் தள்ளப்பட்டுள்ளார். இந்த காட்சியும் தற்போது வைரலாகி வருகிறது. இந்தத் தொடரில் பெங்களூர் FC அணிக்காக அதிக கோல்களை அடித்தவர் (5 கோல்) சிவசக்தி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!