விளையாட்டு

”இவரின் பார்ம் இந்திய அணியின் பல மடங்கு கூட்டியுள்ளது,,இது தொடரவேண்டும்” -மிச்செல் ஜான்சன் கருத்து !

விராட் கோலி மீண்டும் பார்மிற்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சியை தரும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

”இவரின் பார்ம் இந்திய அணியின் பல மடங்கு கூட்டியுள்ளது,,இது தொடரவேண்டும்” -மிச்செல் ஜான்சன் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடிக்க ஆப்கானிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. எனினும் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

”இவரின் பார்ம் இந்திய அணியின் பல மடங்கு கூட்டியுள்ளது,,இது தொடரவேண்டும்” -மிச்செல் ஜான்சன் கருத்து !

அதேநேரம் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி இரண்டு அரை சதங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அறிவித்துள்ளார்.

விராட் கோலியின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. இதைத் தொடர்ந்து பல முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

”இவரின் பார்ம் இந்திய அணியின் பல மடங்கு கூட்டியுள்ளது,,இது தொடரவேண்டும்” -மிச்செல் ஜான்சன் கருத்து !

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜான்சன் விராட் கோலியின் சமீபத்திய பார்ம் குறித்து பேசியுள்ளார். அதில், ”விராட் கோலி மீண்டும் பார்மிற்கு வந்திருப்பது இந்திய அணிக்கு மகிழ்ச்சியை தரும். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்ற பிறகு, அணியின் கவனத்தை முற்றிலுமாக மாற்றி பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். தற்போது பேட்டிங்கில் அவர் அசத்தி வருவது இந்திய அணிக்கு பலத்தை கொடுத்திருக்கிறது.

உலக கோப்பையில் களமிறங்குவது என்பது ஒவ்வொரு அணிக்கும் கூடுதல் பலத்தை தரும். அந்த வகையில் இந்திய அணி ஏற்கனவே பலத்துடன் காணப்படுவதால் இந்த தொடரை நிச்சயம் வென்றாக வேண்டும்.இந்திய அணி நீண்ட நாட்களாக மிகப்பெரிய தொடரை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த கடினமான சூழலில் நிச்சயம் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories