Sports
ரிஷப் பந்த் ஆட்டத்தால் பல மில்லியன் டாலர் லாபம் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.. பின்னணி என்ன?
இந்திய அணி கடந்த 2020 மற்றும் 2021 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை பெற்றது. அதிலும் காபா டெஸ்ட் போட்டி இந்திய ரசிகர்களை தாண்டி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெல்லவே முடியாத கோட்டை என்று ஆஸ்திரேலிய அணியால் வர்ணிக்கப்பட்ட அந்த மைதானத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அடித்த அந்த பௌண்டரி காபா என்ற ஆஸ்திரேலியாவின் கோட்டையை சுக்குநூறாக்கியது. அந்த போட்டியை வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் ஒன்றாக ஐ.சி.சி அங்கீகரித்தது.
காபா டெஸ்டில் ரிஷப் பந்த் இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இந்தியா அணியை வெற்றி பெற வைத்திருப்பார். இந்த நிலையில் அந்த போட்டியில் பந்த் காட்டிய அதிரடியால் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளது.
தற்போது டிஸ்னி ஸ்டார் நிறுவனம், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் ஒளிபரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை சுமார் 360 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முன்பு வெறும் 275 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு ஒளிபரப்பு உரிமத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த தொகை அப்படியே பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் காபாவில் ரிஷப் பந்த் ஆடிய அந்த இன்னிங்ஸ்தான் காரணம் என தற்போது ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. காபா டெஸ்ட் போட்டி உலக அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது. இதன் காரணமாகவே இந்த அளவு ஒளிபரப்பு தொகை ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
-
விளம்பர வெறியால் கருகும் சம்பா பயிர்கள்.. விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் விஜய்.. - உதயநிதி விளாசல்!