Sports
மைதானத்தில் நுழைந்த போராட்டகாரர்கள்.. ஸ்தம்பித்து நின்ற ஆஸ்திரேலிய - இலங்கை வீரர்கள் : நடந்தது என்ன?
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு அங்கு 3 டி20 மற்றும் 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி பதிலடி கொடுத்தது.
அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய அந்த அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித், 145 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி தற்போதைய நிலையில் 160 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.
இந்த போட்டியின்போது, இலங்கையில் அதிபருக்கு எதிராக நடந்த போராட்டம், மைதானத்திலும் எதிரொலித்தது. போட்டி நடக்கும் காலே மைதானத்தை சுற்றி போராட்டக்காரர்கள் அணிவகுத்து நிலையில், அவர்கள் மைதானத்திலும் புகுந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் போட்டிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!