Sports
"இங்கிலாந்து அணி எதுவும் கற்றுக்கொள்ளவில்லை!” முட்டு கொடுக்கும் மைக்கேல் வாகனே விமர்சிக்க காரணம் என்ன?
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் பந்த் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும் குவித்தனர்.
ஆனால் இந்த போட்டியில் இவர்களை மீறி டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பும்ரா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். பிராட் ஓவரில் 29 ரன்களை குவித்து 28 ரன்களை குவிந்திருந்த லாராவின் சாதனையை முறியடித்தார்.
அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்து வலிமையான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியை முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். இந்த போட்டி குறித்து கூறிய அவர், இங்கிலாந்து காலையில் தவறாகவே மீண்டும் ஆட்டத்தைப் புரிந்துள்ளது. இந்திய அணியின் டெய்ல் என்டர்கள் களத்தில் நிற்கும்போது மேகங்கள் சூழ்ந்திருந்த வேளையில், அணியில் ஆண்டர்சன், பிராட் போன்ற ஜாம்பவான்கள் ஆப்-ஸ்டம்பிற்கு மேலே வீசியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் பீல்டிங்கை விரித்து வைத்து பவுன்சர் வீசுகிறார்கள். இது கடந்த ஆண்டு லார்ட்ஸில் நடந்ததைப் போலவே இருந்தது. லார்ட்ஸில் இருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை" எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதியபோது பௌன்சர்களால் பழிவாங்கும் விதமாக சமி-பும்ரா ஜோடிக்கு இங்கிலாந்து அணி பௌன்சர்களாய் வீசியது. அந்த போட்டியில் அபார பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்த சமி-பும்ரா ஜோடி குவித்த ரன்களால் இங்கிலாந்து அணி அந்த போட்டியில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!