Sports

37-வது வயதில் இந்திய அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக்.. முதல் போட்டியிலேயே வெற்றிபெற்று அசத்தல்!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் சிறப்பான ஆடிய அவர் உலகக்கோப்பை அணியில் தனது பெயரை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் தனது 37-வது வயதில் அவர் இந்திய அணியின் கேப்டனாக செய்யப்பட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் அந்த அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் ஆடவுள்ளது. இதற்கான பயிற்சியாக டெர்பிஷையர் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆடியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் ஆடிய டெர்பிஷையர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி, 16.4 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 30 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்களும், தீபக் ஹூடா 37 பந்தில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 59 ரன்களும் குவித்தனர். இந்தியாவுக்கும், நார்தாம்டன்ஷையருக்கும் இடையேயான இரண்டாவது டி20 பயிற்சி போட்டி நாளை நடைபெற உள்ளது

Also Read: "மோடி நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள்".. இணையத்தில் வைரலான 'MONEY HEIST' பேனர்!