இந்தியா

"மோடி நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள்".. இணையத்தில் வைரலான 'MONEY HEIST' பேனர்!

நாங்கள் வங்கியை மட்டுமே கொள்ளை அடித்தோம், ஆனால் நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள் என மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

"மோடி நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள்".. இணையத்தில் வைரலான 'MONEY HEIST' பேனர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.கவின் தேசிய செயற்குழு பொதுக்கூட்டம் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு மோடியை எதிர்த்து வைக்கப்பட்ட பேனர் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலகெங்கும் பெரும் புகழ் பெற்ற தொடர் மணி ஹெய்ஸ்ட்' (MONEY HEIST). இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

"மோடி நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள்".. இணையத்தில் வைரலான 'MONEY HEIST' பேனர்!

இந்த தொடரில் நாயகர்கள் வங்கி மற்றும் நாட்டின் தங்கத்தை திருடுவார்கள். இதை முன்வைத்து ஹைதராபாத்தின் எல்.பி நகருக்கு அருகில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில், “Mr N Modi, we only rob bank, you rob the whole nation” என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. அதாவது, நாங்கள் வங்கியை மட்டுமே கொள்ளை அடித்தோம், ஆனால் நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்த பேனரை தெலுங்கானா ராஷ்ட்ரிய ஸ்மிதி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய். சதீஸ் ரெட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "Such creativity!" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

இது தவிர ஹைதராபாத்தின் பல்வேறு நகரங்களில் மோடியின் வருகையை எதிர்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடியின் வருகையை தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்க்கின்றனர் என்பது தெரியவருகிறது.

banner

Related Stories

Related Stories