Sports
22 மாதங்களுக்குப் பிறகு ரஞ்சி டிராபிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த BCCI - போட்டிகள் எவ்வாறு நடைபெறும்?
22 மாதங்களுக்குப் பிறகு ரஞ்சி டிராபிக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது பி.சி.சி.ஐ. இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடக்கப்போகும் இத்தொடர், பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது தொடங்கி, மார்ச் 10-ஆம் தேதி முதல் கட்டம் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு ஐ.பி.எல் தொடர் நடக்கிறது. அது முடிந்ததும் மே 30 முதல் ஜூன் 26 வரை இரண்டாம் கட்டம் நடக்கிறது.
கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், டெல்லி, அஹமதாபாத், கவுஹாத்தி, கட்டாக், திருவனந்தபுரம், ஹரியானா என 9 இடங்களில் மொத்தம் 65 போட்டிகள் நடக்கின்றன. மொத்த அணிகளும் 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 8 எலைட் பிரிவுகளும், 1 பிளேட் பிரிவும் அடக்கம். எலைட் பிரிவு ஒவ்வொன்றிலும் 4 அணிகள் இருக்கும். பிளேட் பிரிவில் 6 அணிகள்.
குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடும். மொத்தம் 57 போட்டிகள். எலைட் பிரிவில் இருக்கும் அணிகள், தங்கள் பிரிவில் இருக்கும் அனைத்து அணிகளுடனும் விளையாடும். பிளேட் பிரிவில் இருக்கும் அணிகள், ஏதோவொரு மூன்று அணிகளோடு மட்டும் ஆடும்.
பிளேட் பிரிவில் முதலிடம் பெறும் அணி, எலைட் பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகளில் கடைசி இடம் பிடிக்கும் அணியோடு மோதும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, எலைட் பிரிவில் முதல் 7 இடம் பிடிக்கும் அணிகளோடு காலிறுதியில் இணையும்.
“எலைட் பிரிவின் ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் ஒவ்வொரு அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அணிகளின் ரேங்கிங்கில் கடைசி இடம் பிடிக்கும் அணி, பிளேட் பிரிவை வெல்லும் அணியோடு தகுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி, காலிறுதிக்குத் தகுதி பெறும்” என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெய் ஷா.
“ரஞ்சி கோப்பையை 9 இடங்களுக்கு நிர்ணயித்திருக்கிறோம். கொரோனா, பயோ பபிள் பிரச்னைகள் இல்லாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் எழுதியிருக்கிறார் ஜெய் ஷா.
தமிழ்நாடு அணி டெல்லி, ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் அணிகளோடு H பிரிவில் இடம்பெற்றிருக்கிறது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!