Sports
பதக்க வாய்ப்பு பிரகாசம்: ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் சவுரவ் முதலிடம்!
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவருக்கான துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் 586 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியா வீரர் சவுரவ் சவுத்ரி.
டோக்கியோவில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் 586 புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதே போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 575 புள்ளிகளுடன் 17 வது இடம் பிடித்து வெளியேறினார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு துவங்க உள்ள நிலையில்,19 வயதான சௌரப் சவுத்ரி இந்திய அணிக்கு முதல் பதக்கத்தை இன்று வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
19 வயதான சௌரப் சவுத்ரி ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!