Sports
பரவி வரும் கொரோனா.. தொற்றால் பாதிக்கப்படும் வீரர்கள்: மீண்டும் ரத்தாகிறதா ஒலிம்பிக் போட்டி?
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்துக் கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று உலகம் முழுவதும் குறைந்ததை அடுத்து ஒரு வருடம் கழித்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் என உலகின் பல நாடுகளிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டோக்கியோ வந்தடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் நீடித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் 98 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குழுவின் தலைவரான டோஷிரோ முடோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,"அதிகரித்து வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்வது சவாலாக உள்ளது. இது குறித்து விவாதித்து வருகிறோம். கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
கொரோனா பரவல் சூழ்நிலையைப் பொறுத்து ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் கூடி முடிவெடுப்பார்கள். பிறகு அவர்கள் போட்டி நடத்துவது குறித்து முடிவு எடுப்பார்கள். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டியை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!