Sports

''தோனி என்னை பதட்டப்படுத்தாமல் இருந்திருந்தால்...'' : 8 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பீருக்கு திடீர் ஞானோதயம்!

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல கம்பீர் முக்கிய காரணமாவர். இறுதிப்போட்டியில், இந்திய அணி சச்சின், சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிடும்.

பின்னர், கவுதம் கம்பீர் கோலி மற்றும் தோனியுடன் இணைந்து அணியை சரிவில் அடுத்து மீட்பார். சத்தத்தை மூன்று ரன்களில் தவறவிட்ட அவர் 97 ரன்களும், தோனி 91 ரன்களும் சேர்த்தனர். அணியை சரிவில் இருந்து மீட்ட கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்காமல் கடைசிவரை களத்தில் நின்ற தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது நான் சதம் அடிப்பதை தோனி நினைவுபடுத்தாமல் இருந்திருந்திருந்தால் நான் சதம் அடித்திருப்பேன் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் சதத்தைத் தவறவிட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏன் சதத்தைத் தவறவிட்டோம் என்ற கேள்வியை எனக்குள் நானே பலமுறை கேட்டிருக்கிறேன்.

நான் 97 ரன்கள் அடித்தேன் என்ற விவரமே களத்தில் இருந்த எனக்குஅப்போது தெரியாது. எனக்கு என்னுடைய தனிப்பட்ட ஸ்கோர் என்ன என யாரும் சொல்லவில்லை அதுபற்றி நினைக்கவும் இல்லை. என்னுடைய நோக்கம், கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

Also Read: காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல், ஜிலேபி சாப்பிட்டு கமெண்ட்ரி கொடுத்த எம்.பி கம்பீர்

ஓவரின் இடைவெளியில், நானும் தோனியும் பேசிக்கொண்டோம். அப்போது, தோனி என்னிடம் நீங்கள் இப்போது 97 ரன்கள் அடித்திருக்கிறீர்கள். சதம் அடிக்க இன்னும் 3 ரன்கள்தான் இருக்கிறது. 3 ரன்கள் அடித்தால் சதத்தை எட்டிவிடலாம் என்றார்.

தோனி அவ்வாறு கூறும்வரை எனக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. தோனி கூறிய பின்பு எனது இலக்கு மாறிவிட்டது. ஒருவேளை என்னிடம் தோனி சொல்லாமல் இருந்திருந்தால், என்னால் எளிதாகச் சதம் அடித்திருக்க முடியும்.

97 ரன்கள் இருந்தபோது, இன்னும் 3 ரன்கள் தான் சதம் அடிக்க தேவை என்ற விருப்பம் எனக்குள் வேகத்தை ஏற்படுத்தியது, அந்தப் பதற்றத்தில் ஆட்டமிழந்தேன். இன்று கூட மக்கள் என்னிடம் 3 ரன்களை தவறவிட்டுவிட்டீர்கள் என்றுதான் கேட்கிறார்கள் " எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மைதானத்தில் பெரிய திரைகள் வைக்கப்பட்டு அதில் அணியின் ஸ்கோர் மற்றும் வீரர்களின் ஸ்கோர் இருக்கும். தோனியின் மீதான வன்மத்தில் தான் கம்பீர் இவ்வாறு கூறுகிறார் என தோனி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read: ’மக்கள் பிரச்னையை விட ஜிலேபிதான் முக்கியமா?’ : எம்.பி கம்பீரை காணவில்லை - கடுப்பில் மக்கள் ஒட்டிய போஸ்டர்