விளையாட்டு

காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல், ஜிலேபி சாப்பிட்டு கமெண்ட்ரி கொடுத்த எம்.பி கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் ட்விட்டரில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல், ஜிலேபி சாப்பிட்டு கமெண்ட்ரி கொடுத்த எம்.பி கம்பீர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இத்தகைய பாதிப்புகளினால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை டெல்லி வாழ் மக்‍கள் சந்தித்து வருகின்றனர்.

காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக வாகனங்களின் இயக்கத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு. ஆனால் காற்று மாசுபாடு எவ்விதத்திலும் குறையவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நிலவும் காற்றுமாசு குறித்து விவாதிக்க பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரான கவுதம் கம்பீர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இந்தியா- வங்கதேசம் அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு கமெண்ட்ரி செய்ய சென்றுள்ளார்.

இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணன் கம்பீருடன் ஜிலேபி சாப்பிடும் போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதை கம்பீர் ரீட்வீட் செய்தார்.

காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்காமல், ஜிலேபி சாப்பிட்டு கமெண்ட்ரி கொடுத்த எம்.பி கம்பீர்

காற்றுமாசு குறித்து டெல்லி அரசு எடுத்த முடிவுகளை கடுமையாக விமர்சித்த கம்பீர், காற்றுமாசு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் போட்டிக்கு சென்றுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இணையவாசிகள் பலரும் கம்பீரின் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து, ட்விட்டரில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கம்பீர் விளக்கமளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories