Sports
அர்ஜூனா விருதுக்கு ஜடேஜா, பும்ரா, ஷமி, பூனம் யாதவ் பெயர்கள் பரிந்துரை !
விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெண்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.
இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு , கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!