Sports
IPL 2019 : பட்லர் அதிரடியில் வீழ்ந்தது மும்பை
ஐபிஎல் தொடரின் 27-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியா ரகானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணி களமிறங்கியது.
ரோகித் சர்மாவும், டி காக்கும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ரோகித் சர்மா 47 ரன்னிலும், சூர்யகுமார் 16 ரன்னிலும், பொலார்டு 6 ரன்னிலும் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிய டி காக் 52 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரியுடன் 81 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்னுடன் கடைசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான். ரகானேவும், ஜோஸ் பட்லரும் ஆரம்பத்தில் இருந்தே பவுண்டரி, சிக்சர்களுமாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது ரகானே 37 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 7 சிக்சர், 8 பவுண்டரியுடன் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் 31 ரன்னிலும், ராகுல் திரிபாதி, லிவிங்ஸ்டோன் ஆகியோர் ஒரு ரன்னிலும் வெளியேறினர். ஸ்டீவன் ஸ்மித் 12 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மும்பை பவுலர்கள் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை எடுத்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Also Read
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?