Politics
“அட்றா சக்க, அந்த மாஸ் ஜோசப்பே...” : அமைச்சர் ராஜ்மோகனுக்கு தி.மு.க பதிலடி!
த.வெ.க. அரசைக் கண்டித்து ஆளுநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த புகாரைச் சுட்டிக்காட்டி விமர்சித்த த.வெ.க அமைச்சர் ராஜ்மோகனுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் பதிலடியளித்துள்ளது.
இது குறித்து, தி.மு.க சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு:
த.வெ.க. தொடங்கியதற்கு முன்பான தமிழ்நாட்டு அரசியலில் நடந்தது எதுவும் தெரியாத முட்டாள் கூட்டம் என்றுதான் இவர்களை இதுவரை நினைத்திருந்தோம்.
ஆனால், த.வெ.க.வைத் தொடங்கிய பிறகு அதன் தலைவர் விஜய் என்ன செய்தார் என்பது கூட தெரியாத தற்குறிகள் இவர்கள் என்பதை மீண்டும் நிரூபிப்பது போல பேசியுள்ளார் மங்குனி அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள்.
கட்சி தொடங்கி விக்கிரவாண்டியில் போட்ட முதல் கூட்டத்தில், ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்துவோம் என்று பேசிவிட்டு, அதே ஆளுநரிடம் சென்று, 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் மனு அளித்தது அமைச்சர் ராஜ்மோகனுக்கு நினைவில் இல்லையா? அல்லது, அவர் அப்போது அந்தக் கட்சியிலேயே இல்லாமல் எங்காவது பட்டிமன்றத்தில் பேசிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லையா?
“லோக் பவனைச் சுற்றி சுற்றி வந்தார்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துப் பேசும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு ஒரு ரீவைண்ட். 2026 தேர்தலுக்குப் பின், ஆட்சியமைக்க யாரிடம் உரிமைக் கோரி நடையாய் நடந்தீர்கள்? பனையூர் பங்களாவுக்கும் கிண்டி மாளிகைக்கும் உங்கள் அண்ணனின் வண்டி எத்தனை ட்ரிப் அடித்தது என்பதைத்தான் தமிழ்நாடே பார்த்ததே!
எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர், டி.ஜி.பி., காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்பவர்களிடம் மனு அளிப்பது என்பது காலாகாலமாக செய்யப்படும் ஒரு அரசியல் நடவடிக்கை.
இதற்குப் பொருள் அவர்கள் ஆளுநர் பதவியை ஆதரிக்கிறார்கள் என்பதோ, ஆளுநர் உள்ளிட்டோர் முழுக்க நூறு விழுக்காடு நடுநிலை வகிப்பவர்கள் என்பதோ அல்ல. மக்களிடையே ஒரு விவகாரத்தைக் கொண்டு செல்வதற்கும், அதனை ஊடகங்கள் வாயிலாகப் பேசுபொருள் ஆக்குவதற்குமான உத்திதான் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளிக்கும் நடைமுறை.
கடந்த காலங்களிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் இதேபோல பல்வேறு விவகாரங்களில் நடவடிக்கை கோரி ஆளுநரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து தேர்தல் நடந்தால் ஆட்சியை இழக்கும் நீங்களும் வருங்காலத்தில் இதைச் செய்யத்தான் போகிறீர்கள்.
எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரையும் தற்குறிகளாக எண்ணி மீடியா மைக் முன்பாக எதையாவது உளறி, நீங்கள் மங்குனிகள் என்பதை மணிக்கொரு முறை காட்டிக்கொண்டு இருக்காதீர்கள்.
ஆளுநரின் அதிகார அத்துமீறலைக் கட்டுப்படுத்தவும், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் உரிமையையும் காப்பாற்றவும் உச்சநீதிமன்றம் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஆளுநர் பதவிக்கு எதிரான அறிக்கை கூட வெளிவரக் கூடாது என்பதற்காக, நீதியரசர் குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த பயந்தாங்கொள்ளி சோப்ளாங்கிதான் உங்கள் தலைவர்.
துணை முதலமைச்சராக இருந்தபோதே ஆள்நரைப் பார்த்து, “Who are you? You are just a Postman” என்று கேட்டார் எங்கள் இளைஞரணிச் செயலாளர். இப்போதும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இதே வாக்கியத்தைச் சொல்ல உங்கள் முதலமைச்சருக்குத் துணிச்சல் இருக்குமா? இருக்காது! ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு என நாடகமாடுவது யார் என்பது இதிலேயே வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
Also Read
-
துணைவேந்தர் நியமனம் : முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் – மாநில உரிமையைக் காப்பாரா விஜய்?
-
பெண்களைக் குறிவைத்து ஆபாசத் தாக்குதல்.. AI மூலம் வக்கிரப் பிரச்சாரம்: கொதித்தெழுந்த மேயர் பிரியா!
-
“கோமாளி அரசுக்கு... சம்மட்டி அடி கொடுப்பதே சரியான வழி!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
காங்கிரஸுக்கு இடமில்லையா? - 5 வேட்பாளர்களை அறிவித்து அகிலேஷ் அதிரடி!
-
“உதயா அண்ணன் வாராரு...” - உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பாடல் - விவரம்!