Politics
“தவெக ஆட்சியில் தமிழ்நாடு சூறையாடப்பட்டுள்ளது.. தவறை சரி செய்யும் எண்ணம் இல்லை” : கனிமொழி எம்.பி காட்டம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ.10), திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தவெக அரசின் 6 மாத கால ஆட்சி - நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஒரு நாட்டின் மீது இராணுவம் படையெடுத்தால் அங்கு அட்டூழியங்கள் நடக்கும் எனக் கூறுவார்கள். அதுபோல தமிழ்நாட்டின் மீது படையெடுத்து மாநிலத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.
எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து எடுத்துக்கூறினால், ஏதோ மாநிலத்தின் வளர்சியைப் பற்றி பேசுவதுபோல ஒப்பிட்டு, அதனை மிகவும் சாதாரணமாக அமைச்சரே பேசுகிறார். காரணங்களைச் சொல்லி தங்களை நியாயப்படுத்திக் கொள்வதுதான் த.வெ.க அரசின் குறிக்கோளாக உள்ளதே தவிர, தவறை சரி செய்யும் எண்ணம் இல்லை.
6 மாதம் அவகாசம் வேண்டும் கற்றுக்கொள்கிறோம் எனக்கூறிவிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தான செயல்களைத் தான் கற்றுக்கொண்டுள்ளீர்கள். மாநிலத்தில் நிலவும் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவது த.வெ.க-வினர் தான்.
கோரிக்கை வைக்கச்சென்றவரையே தாக்கி, பின் அவரையே மிரட்டி துணை சபாநாயகர் ரவி சங்கர் பேசவைத்ததாக கூறப்படுகிறது. இதே போன்று தூத்துக்குடியில் எம்.எல்.ஏ மீது பா*யல் குற்றச்சாட்டு வைத்தவரை மிரட்டி வழக்கை திரும்பப்பெற செய்தார்கள். குற்றச்சாட்டு வைத்தவர்களையே மிரட்டுவது, கைது செய்வது தான் த.வெ.க. அரசின் வழக்கமாக உள்ளது.
பெண் மாவட்ட ஆட்சியருக்கே தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தான் குற்றம் செய்யவில்லை என எம்.எல்.ஏ கூறுகிறார். பிறகு ஏன் திடீரென ஆட்சியருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இதற்கும் ஒரு திரைக்கதை, வசனம் எழுதுவார்கள், என தெரிவித்தார்.
Also Read
-
“த.வெ.க ஆட்சியின் 6 மாதங்களில் என்ன மாற்றம் வந்துள்ளது?” : இ.பரந்தாமன் சரமாரிக் கேள்வி!
-
“ICU-வில் சட்டம் - ஒழுங்கு.. கோமாவில் ஆட்சி நிர்வாகம்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
-
சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆட்டம்.. கட்டுப்படுத்துவாரா டம்மி CM? : உதயநிதி கேள்வி!
-
நாள்தோறும் கொ*கள்... பொறுப்பற்று பேசும் த.வெ.க - காங்கிரஸ்!
-
பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்களை நுழைத்த போலி அரசு! : முரசொலி தலையங்கம் கடும் கண்டனம்!