
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை - கொள்ளை சம்பவங்கள் மக்களை மிகுந்த அச்சத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்று தக்க நடவடிக்கை எடுக்காமல், “கொலைகள் நடக்கத்தான் செய்யும்” என பொறுப்பற்று பேசியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
“தன் கூரை வேகும் வரை, பிறர் கூரை வேக்காடு தெரியாது!” என்பதுபோல் தமிழ்நாட்டை ஆள்பவர்களே பேசுவது, எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுபோல்தான் இருக்கிறது.
திபஒளிப் பண்டிகை நாளான நவ.8 அன்று அதிகப்படியாக 13 கொலைகள் நடந்துள்ளன. அதில் ஒரு காவல்துறை அதிகாரியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் அதிகாரி கைது செய்யப்பட்டதற்கு காரணம், சாலையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததை தட்டிக்கேட்டதற்காக...
இப்படி ஒரு அப்பட்டமான அவல நிலை அரங்கேறியும், முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தாரா? என்றால் அவர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பவில்லை என்பதாகத்தான் நிலை இருக்கிறது.

இதனைச் சுட்டிக்காட்டி, “இதற்கு எதற்கு காவல்துறை அதிகாரம், அரசு அதிகாரம் எல்லாம்? காவல்துறைக்கே இங்கு பாதுகாப்பு இல்லையே!” என்பதான கண்டனங்கள் தமிழ்நாடு முழுவதும் நிரம்பி வழிகின்றன.
ஆனால், காலை 10 முதல் மாலை 6 மணிவரை மட்டுமே பணி செய்வேன் என கட்டுக்கோப்பாக இருக்கும் மவுனகுரு முதலமைச்சர் விஜய்க்கு, இதுபற்றி கவலை இருப்பதாக தெரியவில்லை.
மாறாக, குற்றங்கள் நடப்பதைக் கண்டிக்காமல், திசைத்திருப்பல் அரசியல் செய்ய நாள்தோறும் ஆயத்தமாகி வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை சுட்டிக்காட்டினால், மேதாவிகள்போல் இதற்கு முன்பும் நடந்தது என்கிறார்கள். இதற்கு முன்பு நடந்திருக்கிறது என வெற்றுக் காரணம் காட்டி, பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதுதான், த.வெ.க.வின் ஆகச்சிறந்த மாற்றம்.
இதுவரை, தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் யாரும்... இவ்வளவு பொறுப்பற்று பேசியதாக வரலாறு இல்லை. இப்படியான வரலாற்றை மாற்றிய பெருமை த.வெ.க.வையே சாரும்.
நாடும், ஆட்சியாளர்களும் இப்படி இருக்க, பதவிக்காக கூட்டணி சேர்ந்த காங்கிரசின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாக்கூர், “குற்றமே இல்லாத சமூகத்தை பின்லாந்தில் வேண்டுமானால் உருவாக்கலாம்” என்கிறார்.






