Politics
காணாமல்போன 7 வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதில் தொடரும் தாமதம்! : தவெக அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் - ஆலம்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த 7 வயது சிறுமி காணாமல்போய் 10 நாட்களுக்கு மேல் ஆகியும், அக்குழந்தை குறித்த உரிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கு த.வெ.க ஆட்சியின் அலட்சியப் போக்குதான் காரணம் எனத் தெரிவித்து, இன்று (அக்.22) ஆலம்பூண்டியில் தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் தலைமையுரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுமி காணாமல்போன 3ஆவது நாளில் இருந்து காவல்துறையைத் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறேன்.
ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்கூட, எனக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
த.வெ.க ஆட்சியில் நாள்தோறும் பொய்கள் பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு அநீதி இழைத்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிம்பத்தை டெல்லி வரை சென்று பரப்பி வருகிறார்கள்.
ஆனால், உண்மை என்ன? பெண்களுக்கு எதிரான அநீதி மட்டுமே அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கொ*, கொ*ளை, பா*யல் குற்றங்கள்தான். போ*ப் புழக்கம் தலைவிரித்தாடுகிறது.
இதற்கு எதிரான நடவடிக்கைகளை த.வெ.க அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.
கடந்த 5 மாத ஆட்சிக்காலத்தில் த.வெ.க அரசின் நிர்வாகத் தோல்வியைக் கண்டிக்கும் வகையில், அவர்களுக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. அது இடைத்தேர்தல் முடிவுகளிலேயே வெளிப்பட்டுவிட்டது.”
Also Read
-
பழக்க தோஷத்தில் இந்த திட்டத்தையும்... : த.வெ.க அரசுக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க-வின் பொய் - ஒரே ஒரு பேட்டியில் காலி ; திட்டுவதில் இருக்கும் ஆர்வம், திட்டங்களில் இருக்கட்டும்!
-
மழைக்கால ஆய்வில் சென்னை மேயருக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை : துணைமேயர் பரபரப்பு குற்றச்சாட்டு!
-
தமிழ்நாடு காவல்துறையில் ‘இந்தியும் ஆங்கிலமும்’.. தவெக ஆட்சியில் தமிழுக்கே இடமில்லையா? : திமுக காட்டம்!
-
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட Finance with Harish.. Cyberbullying ஆ? ஜேசன் சாமுவேல் மீது வழக்கு - பின்னணி?