Politics
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
தமிழ்நாட்டில் சுமார் 50 - 60 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான உணவுப் பற்றாக்குறை உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், போர் உள்ளிட்ட பல சிக்கல்கள் இதற்கு இதர காரணங்களாக இருந்தாலும், த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வி முதன்மை காரணமாக விளங்குகிறது.
சரியான நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்காமல், விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கியது; விலைவாசி உயரும் வகையில் நிர்வாகத்தை பொறுப்பற்று நடத்தியது என த.வெ.க.வின் தோல்வி நிர்வாகத்திற்கான காரணங்களும் நீண்டுகொண்டே வருகின்றன.
எனினும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் பல கோடி ரூபாய் செலவு செய்து லண்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு கார் ரேஸ் பார்ப்பது; ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலாக மகிழுந்து வழங்குவது; ரூ.1,200 கோடியில் பிரம்மாண்டமாக புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கத் திட்டமிடுவது என்பதாகத்தான், ஆடம்பர முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இதனைக் கண்டித்து மக்களும், அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் அறப் போராட்டம் நடத்தினால், அவர்களை அறமற்ற வகையில் த.வெ.க அரசின் காவல்துறை கைது செய்து வருகிறது.
இவை எல்லாம், இதுவரை டெல்லி எஜமானர்களால் மட்டுமே கட்டவிழ்த்துவிடப்பட்டு வந்த நிலையில், பா.ஜ.க.வின் மற்றொரு முகமாய் விளங்கும் த.வெ.க.வும் அதே மக்கள் விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
மருத்துவமனைகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களைக் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு திர்வு காணாமல், மருத்துவமனை முழுவதும் விளம்பரம் செய்து தங்க மோதிரம் வழங்கி வருகிறார் மக்களுக்கான மக்கள் தொடர்பே இல்லாத முதலமைச்சர் விஜய்.
உங்கள் அண்ணன் விஜய்... விஜி... வி... அ.. ஆ.. இ.. ஈ... என வசனம் பேசி ஆட்சியைப் பிடித்த இன்றைய முதலமைச்சர் விஜய், சொன்னதுபோல் பெண்கள் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுத்தாரா என்றால், அதுவும் இல்லை. இன்றுவரை வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகின்றன.
எனினும், இதற்கும் தமக்கும் தொடர்பே இல்லாததுபோல், தாந்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்.
மக்களின் துயரை புறந்தள்ளும் சிலரின் கவர்ச்சி மயக்கத்தால், பலருக்கு தீரா பசி உண்டாகும் சூழல் உருவாவதை விஜய் இனியும் உணராவிடில், மக்கள் - தங்களது வாக்குகளால் உணர்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என தமிழ்நாடு முழுவதும் எச்சரிக்கை குரல் எழுந்து வருகின்றன.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!
-
பூந்தமல்லி- போரூர்– வடபழனி மெட்ரோ வழித்தடம் சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்: மு.க.ஸ்டாலின்!