Politics
“தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது செவிலியர்களை ஏமாற்றியுள்ளது த.வெ.க அரசு!” : கனிமொழி!
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பு ஒரு முகம், ஆட்சியைப் பிடித்த பின்பு ஒரு முகம் என மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவநம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்.
குறிப்பாக, “தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு செவிலியர்களுக்கு, தங்களது ஆட்சியில் பணி நிரந்தரம் வழங்குவோம்” என வாக்குறுதி அளித்த அன்றைய த.வெ.க தலைவர் விஜய், இன்றைய முதலமைச்சராக இருந்து அறப்போராட்டத்தில் ஈடுபடும் செவிலியர்களை அடாவடித்தனமாக கைது செய்திருக்கிறார்.
இதனைக் கண்டித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.,
“பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு.
தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு.
செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் த.வெ.க வந்திருப்பதற்கு SIR-தான் காரணம்! : வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி!
-
தாராபுரத்தில் தவெக-வின் தில்லுமுல்லு?.. மூதாட்டியை விசில் சின்னத்தில் ஓட்டுப்போடச் சொன்ன அலுவலர்!
-
அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனு!
-
“துறை செயலாளர் இல்லாமல் திண்டாடும் வேளாண் துறை” : தூங்குமூஞ்சி த.வெ.க அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
பாமாயில் விவகாரம் : “3 மாதத்தில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்?” - தவெக அரசை அம்பலப்படுத்திய உதயநிதி!