Politics
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பெறும் சறுக்கலை சந்தித்து வருகிறதென்பதை பொதுமக்கள் உணரத் தொடங்கியுள்ளது, தினந்தோறும் நடக்கும் கொலைகள், நீதிகேட்டு போராடி வரும் மக்கள் அதனை ஒட்டி போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்தும் கைது வேட்டை என தொடர் கதையாகி வருகிறது.
குற்றவாளிகளை கைது செய்வதை விட, குற்றத்திற்கு நீதி கேட்டு போராடும் மக்களை வீதியில் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யும் போக்கை மக்கள் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவர்கள், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா? என தவெக அரசுக்கு கேள்வி எழுப்பி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Also Read
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!
-
சென்னை விமானநிலையம் - தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக: தமிழச்சி தங்கபாண்டியன்!
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!