Politics
“அரசின் தோல்விகள் அம்பலப்படும் என்ற அச்சம்.. பாதாளத்தில் ஜனநாயகம்” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 07) காவல்துறை மானியக்கோரிக்கைக்கு பதிலளித்து, எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம் செய்த முதலமைச்சர், மீண்டும் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்ததாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு, நாள்தோறும் வெளியாகும் கொலை மற்றும் குற்றச் செய்திகள் போதுமான சாட்சியாக இருக்கின்றன. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதுதான் ஒரு அரசின் அடிப்படைக் கடமை. ஆனால், குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக, எதிர்க்கட்சியைத் தாக்குவதற்கான வசனங்களைத் தயாரிப்பதிலேயே இந்த அரசும் முதலமைச்சரும் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.
சட்டம்–ஒழுங்கு குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில், பழைய அவதூறுகளைத் தூசிதட்டி எடுப்பது, இன்றைய தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது.
தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் மீது வீசப்பட்ட அதே பழைய அவதூறுகளை, இன்று அரசியலுக்கு வந்துள்ள புதியவர்களும் பயந்து கையில் எடுக்கிறார்கள் என்றால், கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எங்கள் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், கழகத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிசா சிறைக்கொடுமையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டவர்.
ஜனநாயகம் என்றால் என்ன என்பதைத் தனது போராட்ட வரலாற்றால் நிரூபித்த இயக்கம் தி.மு.க. ஆனால், இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் எங்கே அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவருடன் நேரடியான விவாதத்தையே தவிர்க்கும் அளவுக்கு ஜனநாயகம் பாதாளத்திற்குப் போய் விட்டது என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“ஒரு போராளியின் வீரத்தழும்பு.. அது அவமானமல்ல, பெருமிதம்”: முதல்வர் விஜய்க்கு டி.ஆர்.பி. ராஜா பதிலடி!
-
‘இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.. வேட்புமனுத் தாக்கல் முதல் முடிவுகள் தேதி வரை’ - முழு விவரம் அறிக!
-
சர்க்காரியா கமிஷன் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? - விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
-
இதை படிக்க 3 நாட்கள் எதற்கு? Prepare Well Next Time : முதலமைச்சர் பதிலுரைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் திட்டமிட்டு அனுமதி மறுத்த சபாநாயகர் : தர்ணா - தி.மு.க வெளிநடப்பு!