Politics

“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய ஆசிரியர் தினம் இன்று (செப்.5) நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழகத் தலைவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!

நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!

அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க TeachersDay-வில் உறுதிகொள்வோம்! என தெரிவித்துள்ளார்.

Also Read: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?