Politics

பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, எஸ்.எஃப்.ஐ (SFI) மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ (DYFI) அமைப்பினர் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று (ஜூலை 21) கண்டனப் பேரணி நடைபெற்றது.

டெல்லியில் மாணவர்களைத் தாக்கிய ஒன்றிய அரவைக் கண்டித்து, எஸ்.எஃப்.ஐ மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். சித்ரா தியேட்டர் அருகில் தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று எல்.ஜி. ரோடு ரவுண்டானா பகுதியை அடைந்தது.

அங்கு திடீரென சாலையில் அமர்ந்த போராட்டக்காரர்கள், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், மாணவர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரப்புக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்வதற்காக அப்பகுதியில் குவிக்கப்பட்னர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தநிலையில்,காவல் துறையினரோடு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனங்களில் காவல்துறையினர் அடைத்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த மாணவர் ஒருவர், நீட் தேர்வு ரத்து வலியுறுத்தியும், தர்மேந்திர பிரதான பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து இங்கு எழும்பூரில் பேரணியாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக கைது செய்ததை இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டிக்கிறோம்.

மாணவர்கள் மீது இவ்வளவு பெரிய கைது போராட்டம் நடக்கிறது. இது குறித்து முதலமைச்சர் ஒரு அறிக்கை கூட விடாதது கண்டிக்கத்தக்கது. ணீஸ் விளக்கம் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் எதிர்பார்த்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இதுகுறித்து எந்தவித பதிலும் இல்லாமல் ஆட்சியில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

எங்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் நாளை தொடரும். டெல்லியில் அமித்ஷா காவல்துறையினரை ஏவி விட்டு தடியடி நடத்தியது போல், சென்னையில் மாணவர்கள் கைதுக்கு விஜய் எவ்வித பதிலும் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாஜக அரசு செய்வதைத்தான் மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி தமிழ்நாட்டில் தவெக அரசு செய்வதாக கண்டனங்கள் குவிந்துள்ளது.

Also Read: “தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!