அரசியல்

“தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்? என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்திருக்கும் த.வெ.க.வினர், “மாற்றத்தை தருகிறோம்... மாற்றத்தை தருகிறோம்...” என தெரிவித்து, ஜனநாயக மாண்பையே சீரழிக்கும் மாற்றத்திற்கும், மக்களுக்கான ஏமாற்றத்திற்கும் செயல் வடிவம் அளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, த.வெ.க ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வியையும், தவறுகளையும் சுட்டிக்காட்டும் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க சார்பினர்களை கைது செய்து, அதிகாரத்துவப் போக்குடன் மிரட்டி வருகிறது முதலமைச்சர் விஜய்யின் கீழ் இயங்கும் காவல்துறை.

அவ்வகையில், த.வெ.க.வை விமர்சித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.

“அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?

கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?

ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.”

banner

Related Stories

Related Stories