Politics
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சியமைத்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், இதுவரை அனைத்து துறைகளுக்கும் உரிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால், பல்வேறு அரசு நடவடிக்கைகள் வெறும் கோப்புகளாக அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசைகளில் அசையாமல் காத்துக் கிடக்கின்றன.
அதே வேளையில், “சட்ட ஒழுங்கைக் காப்போம்” என முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்த பிறகு, அமைச்சரவை ஒதுக்கீடு குறித்து வாய் திறக்காதது போலவே, தமிழ்நாட்டின் ‘சட்ட ஒழுங்கு‘ குறித்தும் வாய் திறக்காமல் த.வெ.க முன்னணியினர் அலட்சியத்தின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
இதற்கிடையில், நாகையில் இரு கொலைகள், மரக்காணத்தில் இளைஞர் வெட்டிக் கொலை, ஆண்டிப்பட்டியில் 2 கடைகள் மற்றும் கோயில் நகைத் திருட்டு, ஈரோட்டில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை;
கோவில்பட்டியில் இளைஞர் வெட்டிக் கொலை, வேலூரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வோர்கள் பற்றி புகார் அளித்த பெண்ணின் மீது கொலைவெறி தாக்குதல், த.வெ.க பிரமுகர்கள் பெண்களிடம் அத்துமீறுதல் உள்ளிட்ட எண்ணற்ற சட்ட சீர்கேடு சிக்கல்கள் வலுத்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் அறிவுறுத்தல்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வரும் வேளையில் கூட, எப்போதும் போல இப்போதும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக அசைந்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.
இந்நிலையில், “போதைப் புழக்கத்தைக் குறைப்போம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என இரு கோப்புகளுக்கு கையெழுத்திட்ட பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்றும்;
“சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அரசு பொறுப்பேற்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?” என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
உபா சட்ட வழக்குகளிலும் ஜாமீன் வழங்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர் : திருச்சி IG இல்லம் அருகே நடந்த அதிர்ச்சி!
-
“மாயாஜாலம் வளர்ச்சியைத் தராது” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !