Politics
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பீகாரில் சிறப்பு வாக்காளர்கள் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தொகுதி வாரியாக வெளியாகி உள்ள பட்டியல் அடிப்படையில் கணிக்கிட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு வாக்காளர்கள் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆதாரை ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!