Politics
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமை நீதிபதி மீது தனது ஷூவை கழற்றி வீசி தாக்க முயன்றுள்ளார்.
அவரை பாதுகாப்பு பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு அவரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வழக்கறிஞர் சனாதன தர்மத்தை அவமரியாதை செய்வதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று கோஷமிட்டவாறு சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தால் உச்சமன்றத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் கவனம் சிதற வேண்டாம். இந்த நிகழ்வால் நான் திசை திருப்பப்படவில்லை என்று கூறினார்.
மேலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தங்கள் வாதத்தை மேற்கொள்ளும்படி கூறினார். இதனிடையே தலைமை நீதிபதியை தாக்க முயன்ற நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
-
தீபாவளி பண்டிகை : தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 20,378 பேருந்துகள் இயக்க முடிவு !
-
BB SEASON 9 : "ஒரு நாள் மேல தாங்க மாட்டாரு?" - Watermelon திவாகரை டார்கெட் செய்யும் சக போட்டியாளர்கள்!
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதல் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!