Politics
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
ஜனதா கட்சி, காங்கிரஸ் என தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஜெகதீப் தன்கர் கடந்த 2003-ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அங்கு பல்வேறு பதவிகளை வகித்த அவர். கடந்த 2019-ம் ஆண்டு மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அப்போது மாநில அரசுடன் பல்வேறு முரண்பாடுகளை சந்தித்த அவர் பின்னர் குடியரசுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதோடு மாநிலங்களவை சபாநாயகராகவும் அவர் திகழ்ந்து வரும் நிலையில், மாநிலங்களவையில் தனது பதவியை மறந்து பாஜக அரசின் பிரதிநிதி போல அவர் செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே இரவு உடல்நிலையை காரணம் காட்டி குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து பாதியிலேயே ஓய்வு பெறுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தற்போது வரை அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், அவர் தங்கியிருந்த அரசு இல்லத்தில் இருந்து அவர் வெளியேறவேண்டும் என ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் துணை குடியரசு தலைவருக்கு பொதுவாக அரசு வீடு ஒதுக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், ஜெகதீப் தன்னகருக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படாததால் அவர் விரைவில் வாடகை வீட்டுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஜெகதீப் தன்கர் 1993 முதல் 1998 வரை ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், அதற்கான ஓய்வூதியத்துக்கு தற்போது மீண்டும் விண்ணப்பித்துள்ளார். இதனால் எம்.எல்.ஏ ஓய்வூதியம் 42,000 கிடைக்க வாய்ப்புள்ளது.
அது தவிர ஜனதாதளம் கட்சி கட்சி எம்.பியாகஇருந்ததற்கு ஓய்வூதியமாக ரூ.45,000-ம் அதுணை குடியரசு தலைவர் ஓய்வூதியமாக 2 லட்சம் ரூபாயும் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர போக்குவரத்து உள்ளிட்ட இதர படிகள், தனி அதிகாரி, உதவியாளர்கள் ஆகியோரும் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!