Politics

“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், “மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு - வேலைவாய்ப்புகள்” குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. மக்களவையில் ஆகஸ்டு 19 ஆம் தேதி, எழுத்துபூர்வமாக கேள்விகளை எழுப்பினார். அவை பின்வருமாறு,

“மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய செயல் திட்டத்தின் விவரங்கள் (NAP SDP) என்ன? இத்திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கிய கூறுகள் யாவை?

இந்தத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சி மையங்களை அரசாங்கம் நிறுவியுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள், தமிழ்நாடு உட்பட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக என்ன?

மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சியை முடித்த பிறகு, மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்துவதில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்க ஏதேனும் சிறப்பு சலுகைகள் அல்லது திட்டங்கள் உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?”

Also Read: “பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!