Politics
“ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொடரும் சிக்கல்கள்!” : மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 6) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில், “ஆதார் அட்டை பயோமெட்ரிக்கில் தொடரும் சிக்கல்கள்! தவிக்கும் பயனாளிகள்.. தீர்வில் தாமதம் ஏன்?” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விரிவான விவரம் பின்வருமாறு,
ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் எழும் சிக்கல்கள் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பில் அனுமதி இல்லாததால் பல்வேறு திட்டங்களின் கீழ் உண்மையான பயனாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மங்கலான கைரேகைகள் மற்றும் பழைய சரிபார்ப்பு கருவியின் கோளாறுகளால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் அவற்றை சரிசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!
-
பூந்தமல்லி- போரூர்– வடபழனி மெட்ரோ வழித்தடம் சரித்திரத்தில் மறைக்க முடியாத கழக அரசின் இடம்: மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசு தொடர்ந்து தோல்வி : தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய விமானத் தொழிற்சாலை நாக்பூருக்கு சென்றது!
-
“இப்போது சொல்லி என்ன பயன்? ; சதிகரமான தேர்தல்கள்தான் நடந்து முடிந்து விட்டதே” : முரசொலி!