Politics
பாஜக வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை தண்டனை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - காரணம் என்ன ?
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் என்பவர் சென்னை சூளைமேட்டில் சேர்ந்த பி.விக்னேஷ் குமார் என்பவரின் வீட்டில் குடியிருந்து வந்தார். ஆனால் வீட்டின் உரிமையாளர் அவரை வீட்டை காலி செய்ய வலியுறுத்தியும் அவர் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து விக்னேஷ் னக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வரும் வழக்கறிஞர் மோகன்தாஸ் வீட்டை காலி செய்யாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மோகன்தாஸ் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், மோகன்தாஸ் வீட்டை காலி செய்யாத நிலையில், மோகன்தாஸுக்கு எதிராக விக்னேஷ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் சதீஷ்குமார், நீதிமன்ற உத்தரவை மதிக்காத வழக்கறிஞர் மோகன் தாஸூக்கு நான்கு மாதம் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அவரை கைது செய்வதற்கான வாரண்ட்டை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
அழகு படுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!