Politics
மேட்ச் பிக்சிங் செய்து தேர்தலில் பா.ஜ.க எப்படி முறைகேடு செய்கிறது? : மோடியின் முகத்திரையை கிழித்த ராகுல்!
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலைபோன்று, பீகார் தேர்தலிலும் தில்லு முல்லுக்களை அரங்கேற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலைபோன்று, பீகார் தேர்தலிலும் தில்லு முல்லுக்களை அரங்கேற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும், மேட்ச் பிக்சிங் தேர்தல்கள் எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் ஒரு விஷம்போன்றது என The Indian Express ஆங்கில நாளேட்டில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி MP கட்டுரை எழுதியுள்ளார்.
அதில்,தேர்தலில் பாஜக எப்படி முறைகேடு செய்கிறது என்பதை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவை கையகப்படுத்துதல், போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல். வாக்கு சதவிகிதத்தை அதிகரித்து கூறுதல், பாஜக ஜெயிக்க வேண்டிய இடங்களில் கவனம் செலுத்தி போலி வாக்குகளை செலுத்துதல், முறைகேடுக்கான ஆவணங்களை மறைத்தல் என ஐந்து பிரிவுகளாக விளக்கியுள்ளார்.
மேலும். மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், 2024ல் நடைபெற்ற மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை மோசடி செய்து பா.ஜ.க. வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழுவைத் திரட்டுதல், போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் வாக்குப்பதிவை உயர்த்துதல், பா.ஜ.க. வெற்றிபெற வேண்டிய பகுதிகளில் போலி வாக்காளர்களை சேர்த்தல் அதன்பிறகு அதற்கான ஆதாரங்களை மறைத்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
மேட்ச் பிக்சிங் மூலம் ஏமாற்றுபவர்கள் விளையாட்டுக்களை வெல்லலாம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் நம்பத்தன்மையை சீர்குலைத்து தேர்தலில் வெற்றி பெறுவது பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கும் செயல் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
இதுபோன்ற ஆதாரங்களுடன் வெளியாகும் நடவடிக்கைகளை பார்த்து பொதுமக்கள் எதிர்வரும் காலங்களில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே, மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலைபோன்று, பீகார் தேர்தலிலும் தில்லு முல்லுக்களை அரங்கேற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும், மேட்ச் பிக்சிங் தேர்தல்கள் எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் ஒரு விஷம்போன்றது என்றும் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!