Politics

ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் அனுமதி : உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதிரொலி !

அதிமுகவை சேர்ந்த ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை அண்மையில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், ராஜேந்திர பாலாஜி மீது ஆளுநர் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை. ஆளுநஏ கால தாமதம் செய்ததற்காக மாநில காவல் துறையிடம் இருந்து வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரின் தவறுக்காக நாங்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவி 2 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இந்த விபரங்கள் அடங்கிய பதில் மனுவை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஆளுநரின் கையெழுத்தில்லாமல் நிறைவேறிய மசோதாக்கள்... மகத்தான சாதனையைச் செய்த முதலமைச்சர் - முரசொலி !