Politics
"விரைவில் அதிமுகவை முடித்து வைத்து விடுவார் பழனிசாமி" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
ரூ.40.11 லட்சம் மதிப்பிட்டில் சென்னை,திருப்பள்ளி தெரு, வால்டாக்ஸ் ரோடு, பத்பநாபா திரையரங்கம் அருகில் அமைய உள்ள மூன்று பயணிகள் பேருந்து நிழற் குடை, அதே பகுதியில் ரூ.2.42 கோடி மதிப்பிட்டில் சென்னை நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்க்கு சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் மூலம் மேற்கொள்ளும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டி பார்ப்பது எங்கள் வேலை இல்லை. திமுக கூட்டணி மீண்டும் 2026 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் நல்ல சூழல் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவை முடித்து வைத்து விடுவார். அதற்கான வேலைகளை அவர் விரைந்து செய்து வருகிறார். ஏற்கனவே அதிமுகவுக்கு 8 முறை தோல்வியை வாங்கி தந்து இருக்கிறார். வரும் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து அதிமுவை முடித்து விடுவார்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பணிகள் முடிவடைந்ததும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் மே மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்"என்று தெரிவித்தார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!