Politics
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சருடன் இணைந்து செயல்பட வேண்டும் - கனிமொழி MP !
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் பட்டு சேலைகளை வழங்கினார்கள்
இதை தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைக்காக தொடர்ந்து போராடி, பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் அவருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசு நம் மீது மூன்று மொழிகளை திணிக்க கூடிய முயற்சியை செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் கையொப்பமிட்டால் தான் நிதி கிடைக்கும் என்கிறது. பிற மாநிலங்கள் எல்லாம் கையெழுத்து விட்டு விட்டது. தமிழகம் மட்டும் தனித்து நிற்க்கிறது. தமிழ்நாடு எப்போதுமே தனித்திருக்க கூடிய ஒரு மாநிலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1971க்கு பிறகு மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படவில்லை. தமிழகத்திலும் கேரளத்திலும் மக்கள் தொகையை நாம் குறைத்துள்ளோம். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டதால் பெண்களின் கல்வி உயர்ந்திருக்கிறது. மருத்துவ வசதி உயர்ந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு குறைக்கவில்லை. அங்கு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி குறைத்தால் தமிழகத்திற்கு தொகுதி குறைந்து விடும். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகமான தொகுதிகள் கிடைக்கும்.
இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 39 பேர் போய் போராடும்போதே ஒன்றிய அரசு நமது கருத்துக்கு செவி சாய்க்க மறுக்கிறது. நாளை தென்னிந்தியாவில் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டால், இங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட பாஜகவினர் வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போதே தமிழகத்திற்கு நீதி கொடுக்க மறுக்கிறார்கள். இதில் தொகுதியை குறைத்து விட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் ?"என்று கூறினார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!