Politics
இந்தியாவுக்கென ஒரு மாடல் இருக்குமென்றால் அது தமிழ்நாடு மாடல் மட்டுமே- இங்கிலாந்து பேராசிரியர் புகழாரம் !
The Wire இணையதள நேர்காணலில் கிங்க்ஸ் பல்கலைகழகத்தினல் இந்திய அரசியல் சமூகவியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோ நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பேசியுள்ள அவர், கல்வியாக இருக்கட்டும், தனி நபர் வருமானமாக இருக்கட்டும், ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்தவொரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது.
கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுக்கென்று ஒரு மாடல் இருக்குமென்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும்"என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிகையில் பொருளாதாரம், கல்வி, மருத்துவம், அடிப்படை கட்டமைப்பு என அனைத்திலும் தமிழ்நாடு அரசு முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடித்தட்டு மக்களுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் திட்டங்களே இந்த வெற்றியை பெற காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!