Politics

மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைப்பு : The Wire இணைய இதழ் குற்றச்சாட்டு!

மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மோடி அரசின் மோசமான நடவடிக்கைகளால் நாட்டின் ஒற்றுமை சீர்குலைய அதிக வாய்ப்பிருப்பதாக The Wire ஆங்கில இணைய இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

The Wire ஆங்கில இணைய இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமையை குலைத்துவரும் நிலையில், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே நல்லிணக்கம் இருப்பது மிக மிக அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் நல்லிணக்கத்தை மோடி அரசு சீர்குலைக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு போன்றவற்றின் மோடி அரசின் மோசமான நடவடிக்கைகள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்றும், பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும்The Wire ஆங்கில இணைய இதழ் குறிப்பிட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு, தொகுதி மறுவரையறை போன்றவற்றில் ஒன்றிய பா.ஜ.க., அரசின் ஒவ்வொரு நகர்வும், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன என்று The Wire ஆங்கில இணைய இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது. இருமொழிக் கொள்கையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது தவறு என்று The Wire ஆங்கில இணைய இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

மும்மொழிக் கொள்கை என்பது இந்தித் திணிப்புக்கு எதிராக மீண்டும் ஒரு போரை தூண்டுவதை போன்றது என்று The Wire ஆங்கில இணைய இதழ் குறிப்பிட்டுள்ளது. ஆதிக்க மொழியான இந்தித் திணிப்பால் வடமாநிலங்களில் ஏராளமான தாய் மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன, இதனை பின்பற்றி மேலும் பல மொழிகளை அழிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கூற்று உண்மையானது என்று The Wire ஆங்கில இணைய இதழ் தெரிவித்துள்ளது.

இந்தி பேசும் நாடாக இந்தியாவை சித்தரிக்க ஒன்றிய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரே வண்ணமுடைய இந்து இந்தியாவாக நாட்டை உருவாக்க பா.ஜ.க., ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருவதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் The Wire ஆங்கில இணைய இதழ் எச்சரித்துள்ளது. செம்மொழியான தமிழ் மொழியை அழிக்க ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைப்பதால்தான், தமிழ்நாடு தனது மொழி உரிமைக்காக போராடுகிறது என்று தி வயர் இதழ் குறிப்பிட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது என்று The Wire ஆங்கில இணைய இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பது, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வெற்றி கண்ட மாநிலங்களுக்கான தண்டனை என்றும், தென் இந்திய மாநிலங்களை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்ய முடிவு செய்திருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாதது என்றும் The Wire ஆங்கில இணைய இதழ் கூறியுள்ளது.

பா.ஜ.க.,வுக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளை அதிகரித்தும், எதிரான மாநிலங்களில் தொகுதிகளை குறைத்தும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க., முயற்சிக்கிறது என்று "தி வயர்" ஆங்கில இணைய இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது. மாநிலங்களிடம் இருந்து அதிகளவில் வரிகளை பெற்றுவிட்டு, குறைந்த அளவில் பங்கீட்டை வழங்குவது சரியானதல்ல, இது கூட்டாட்சிக்கு எதிரானது. மோடி ஆட்சியில் இந்தியா எவ்வளவு பிளவுபட்டிருக்கிறது, சமத்துவமற்றிருக்கிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாக The Wire ஆங்கில இணைய இதழ் குறிப்பிட்டுள்ளது. நாட்டை பிளவுபடுத்தும் கொள்கைகளை கைவிட்டு, ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும், மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்றும் The Wire ஆங்கில இணைய இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: ரூ.3 கோடியில் “முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!