Politics
வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் என்று ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது வழக்கறிஞர் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும். 2014 முதல், முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களைக் கடத்த முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும் பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத் தொழிலின் சுயாட்சியை அழிப்பதன்மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும். "தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
இந்திய அளவில் போராட்டங்கள் வலுத்ததன் காரணமாக வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றாலும், மறுபரிசீலனை செய்து அந்த மசோதாவை மீண்டும் செயல்படுத்த இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும். இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கோருகிறது"என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!